அருள்மிகு மணகண்டீஸ்வரர் திருக்கோயில் வேலூர் மாவட்டம் திருமால்பூரில் அமைந்துள்ளது தெவாரப்பாடல் பெற்ற தலங்களில் 11வது தலமாகும்.
குபன் என்ற அரசனுக்காக திருமால் துதீசி முனிவர் மீது தநத சக்கரத்தை வீசினார். ஆனால் அது முனிவரின் தெய்வீக உடம்பில் பட்டு முனை மழுங்கிவிட்டது. குவலையடைந்தார் திருமால் என்ன செய்வதென்று தேவர்களுடன் கலந்தாலோசித்து சலங்தராசுரனை அழிப்பதற்காக உணடாக்கிய சுதர்சன சக்கரம் சிவனிடம் உள்ளதை அறிந்தார்.
உடனே இத்தலம் வந்து அம்பிகை பூஜித்த இந்த லிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள் சிவன் திருமாலின் பக்தியை சோதிக்க பூஜைக்கான ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்து விட்டார்
திருமால் பூஜை செய்யும் போது மலர் ஒன்று குறைய தனது கண்ணைப்பறித்து இறைவனின் திருவடியி;ல் அர்ப்பிணத்தார். இந்த பூஜைக்கு மகிழ்ந்த சிவன் தாமரை மலருக்காக உனது கண்ணை எடுத்து பூஜித்ததால் தாமரை போலவே உனக்கு கண் கொடுக்கிறேன்.
இதனால் உன்னை அழைப்பார்கள். இத்தலமும் திருமாற்பேறு என அழைக்கப்படும் எனக்கூறி திருமால் வேண்டிய சக்கரத்தை கொடுத்தருளினார்.
மேலும் அவர் திருமாலியிடம் நீ கூறி வழிப்பட்ட ஆயிரம் நாமங்களால் என்னை பூஜிப்பவர்களுக்கு முக்தியை கெர்டுப்பேன். ஆதைச்சொல்ல இயலாதவர்கள் என்னை தீண்டச்சிவந்தார், சாதரூபர் மணிகண்டர் தயாநிதியார், பவளமலையார், வட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன் என்று அருளினார்.

இத்திருதலத்தில் ஒரு கணநேரம் தங்கியவர்களுக்கு முக்கியளிக்கவேண்டும் எனவும் இங்கு வழிப்பட்டால் அனைத்து கோயில்களிலுள்ள லிங்கங்களையும் வழிப்பட்ட அனைத்து கோயிலுள்ள லிங்கங்களையும் வழிப்பட்ட பலன் கிடைக்கவேண்டும் எனவும் வரம் பெற்றார்.
பார்வதி தேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கம் கரைந்துவிடாமல் இருக்க லிங்கத்தின் மீது குவளை சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானை மூலஸ்தானம் அருகே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் செந்தாமரைக்கண்ணப்பெருமாள் என்ற நாமத்துடன் உள்ள தலம்.
மூலவரின் அரni அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார். சிவன் கோயில் என்றாலும் பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்சவ காலத்தில் கருடசேவை நடைபெறுகிறது.

சுமார் 1.20 ஏக்கர் அளவில் சுற்று மதில் சுவர்களுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும் இரண்டு பரிகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம் சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
உள் பிரகாரத்தில் விநாயகர் சிதம்பரேஸ்வரர், சோமாஸ்சுந்தர் சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் நடராஜர் கஐலட்சுமி முதலிய சன்னதிகள் உள்ளன.
இத்திருதலத்தில் மாசிமாதம் நடக்கும் 10நாள் பிரமோற்ஸவத்தில் மகம் நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடக்கும். இந்த திருவிழாவில் தான் பெருமாளுக்குரிய கருடசேவையும் நடைபெறும். ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரையும் விஷேமான நாட்களாகும்.