கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக பல மாநிலங்களில் ஏற்பட இருந்த உயிரிழப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரத்த கொடையாளர்களுக்கு அவர் விருதுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்ததால் தான் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்ய்பட்டு, உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறினார்.
தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி வரை மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தை அரசியலாக்கி பொது வெளியில் விவாதிப்பது நாகரீகமாக இருக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்,













