மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் பெத் மோனே மற்றும் அலான கிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 221 ரன்களை எடுத்தது. அந்த அணியின் மோனே அதிகபட்சமாக 109 ரன்களை விளாசினார். இதன் பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆஸ்தில்ரேலியா வீராங்கனைகளின் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 36 புள்ளி 3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியது.














