உலக சாம்பியன் போட்டியில், பளு தூக்குதல் பிரிவில் 199 கிலோ தூக்கி, இந்தியாவின் மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.
வடகொரியா வீராங்கனை ரி சாங் கம், 213 கிலோ எடையை தூக்கி, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தாய்லாந்து வீராங்கனை தான்யா தோன் 198 கிலோ எடை தூக்கி, பளு தூக்குதலில் வெண்கலம் வென்றார்.
2017-ஆம் ஆண்டு பளு தூக்குதலில் மீராபாய் சானு, உலக சாம்பியன் பட்டம் வென்றார். 2022-ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.