• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கடலூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

by Priscilla
September 24, 2025
in News
0
கடலூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

தங்க நகை பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை முறையாக கணக்கில் கொண்டு வராத குற்றச்சாட்டில், ராமநத்தம் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் பிருந்தா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான அம்மணியம்மாள், வேலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, பெரம்பலூர் மாவட்டம் கீழபுலியூரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற நபர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுப்பது போல் நடித்தார். பின்னர் அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இந்த வழக்கில் ராமநத்தம் போலீசார் பிரபாகரனை கைது செய்தனர். அதோடு, 3 பவுன் சங்கிலியும் ரூ.75 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்தை காவல் நிலைய பதிவில் சேர்க்காமல், இன்ஸ்பெக்டர் பிருந்தா கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் முதலில் இடமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் துறை விசாரணை நடைபெற்றது. அதன் அடிப்படையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் லஞ்சம் தொடர்பான வழக்கில் மற்றொரு இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: cuddaloreFEMALE POLICE INSPECTORfraud casepolice inspectorsuspendtamil naduTN POLICE
Previous Post

“அண்ணாமலை கம்-பேக்.. அப்போ நயினார் ?”

Next Post

சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு : பாகிஸ்தானை ஐ.நாவில் கடுமையாக எச்சரித்த இந்தியா

Related Posts

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல் தொழிற்சங்கள் சார்பில் போராட்டம்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

November 17, 2026
Next Post
சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு : பாகிஸ்தானை ஐ.நாவில் கடுமையாக எச்சரித்த இந்தியா

சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு : பாகிஸ்தானை ஐ.நாவில் கடுமையாக எச்சரித்த இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6