அணு ஆயுத அச்சுறுத்தல்களால் புதிய இந்தியா எக்காரணம் கொண்டும் தளராது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “நாட்டின் கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகளின் ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு துணை நிற்கிறது. தாரில் நிறுவப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, தொழில்துறைக்கும் விவசாயிகளின் உற்பத்திக்கும் புதிய வலுசேர்க்கும்,” என்றார்.
பாகிஸ்தானை குறித்தும் அவர் தாக்குப் பேசி, “நமது துணிச்சலான படைகள் `ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பயங்கரவாத முகாம்களை கண் இமைக்கும் நேரத்தில் அழித்தன. நமது பெண்களின் சிந்தூரத்தை களவாடிய பயங்கரவாதிகளை, இந்தியா அவர்கள் வீட்டின் வாசலில் சென்று தண்டித்தது. பயங்கரவாதிகளை அவர்களது சொந்த நிலத்தில் முறியடிக்கும் இந்தியா இது,” என்று தெரிவித்தார்.
மேலும், 1948-ல் ஹைதராபாத் விடுதலையில் சர்தார் வல்லபாய் படேல் காட்டிய உறுதியை நினைவுபடுத்திய பிரதமர், “ஒவ்வொரு இந்தியரும் `மேக் இன் இந்தியா’ பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்,” என்றும் வலியுறுத்தினார்.