மாணவர்களுக்கான இலவச ‘பஸ் பாஸ்’ திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பஸ் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டி, சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது :
“1989 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நான் முதல்முறையாக உரையாற்றியபோது, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கையாக இருந்தது. அதை அப்போதைய முதல்வர் கலையஞர் கருணாநிதி செயல்படுத்தினார். அத்திட்டமே நாட்டுக்கே வழிகாட்டியது.
அதன் தொடர்ச்சியாக, இன்று நமது திராவிட மாடல் ஆட்சியில், மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த முயற்சி கல்வி மற்றும் போக்குவரத்து துறையில் முக்கிய முன்னேற்றமாகும்.
அமைச்சர் சிவசங்கரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இந்தத் திட்டத்தை விழிப்புடன் கண்காணித்து, மேலும் சிறப்பாக செயல்படுத்துவார்கள் என நம்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.