பிரான்ஸின் அதிபர் இமானுவல் மேக்ரான், 14 மாதங்களில் நான்காவது பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னுவை நியமித்துள்ளார். லெக்கோா்னு, இளம் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் மேக்ரானின் நெருக்கமான ஆதரவாளர் ஆவார். 2017 முதல் மேக்ரானின் அனைத்து அரசாங்கங்களிலும் பணியாற்றி வருபவர், மையவாத அரசியல் இயக்கத்தில் முன்னணி பாத்திரம் வகித்துள்ளார்.
பிறகு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இளம் பிரதமர் கேப்ரியல் அட்டல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் செப்டம்பர் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிதீவிர வலதுசாரிகள் கட்சி (ராஸியோனல் பேரணி) வெற்றி பெற்றது. அதற்கிடையில், மிஷேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எதிர்கொண்டு, பிரதமர் பார்னியர் அதிபர் மேக்ரானின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பட்ஜெட்டை நிறைவேற்றுவார் என்று அறிவித்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையற்ற தீர்மானம் கொண்டு வந்ததால் பார்னியர் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார்.
இதன் பின்னர், பிரான்சுவா பேரூ பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரும் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். இதனால், மீண்டும் பிரதமர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னு நியமிக்கப்பட்டார்.
இதன் மூலம், பிரான்ஸ் கடந்த 14 மாதங்களில் நான்காவது பிரதமரை நியமித்துள்ளது.