வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியாவுடனான உறவை, தனது குடும்ப வணிக நலன்களுக்காக பாகிஸ்தானை முன்னிறுத்தி தியாகம் செய்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார் :
“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. தொழில்நுட்பம், திறமை, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மிகவும் அவசியம். ஆனால், தனது குடும்ப வணிக நலனுக்காக பாகிஸ்தானை நாடியதால் டிரம்ப், இந்தியாவுடனான உறவை சீரழித்துவிட்டார். இது அவரது வெளியுறவு கொள்கையில் மிகப்பெரிய பின்னடைவு” என அவர் சாடினார்.
மேலும், “ஜெர்மனி, ஜப்பான், கனடா போன்ற நாடுகளும் இந்தியா சந்தித்த நிலை நாளை அவர்களுக்கும் ஏற்படலாம் என்று கவலைப்படத் தொடங்கியுள்ளன” என சல்லிவன் எச்சரித்தார்.