திருவாரூர் :
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, குடவாசல் பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி வேகமாக வந்த காரை ஹரிகரன் ஓட்டி வந்தார். கார் காட்டூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த ஜே.சி.பி. மீது மோதியது.
இந்த விபத்தில், காரில் பயணித்த மடப்புரம் சேர்ந்த கணேசமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த ஹரிகரன் உட்பட 19 முதல் 22 வயதுடைய எட்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் துளசி என்பவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து நிகழ்ந்தது எனத் தெரியவந்துள்ளது.