சென்னை:
“தேர்தல் வாக்குறுதிகள் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டன” என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வரும் நிலையில், இன்னும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து பட்டியலை பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார்.
பகுதி 1 எனக் குறிப்பிடப்பட்ட அறிக்கையில், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சில முக்கிய வாக்குறுதிகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
கல்வித் துறை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை.
தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளும் தேசிய ஆட்சி மொழிகளாக அறிவிக்க வலியுறுத்தல்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை.
செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு தன்னாட்சி வழங்குதல்; திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்.
உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்த நடவடிக்கை.
அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்பாட்டை கட்டாயப்படுத்துதல்.
இலங்கை தமிழர்கள் தொடர்பான சர்வதேச விசாரணை மற்றும் குடியுரிமை வழங்கும் முயற்சிகள்.
லோக் அயுக்தா அமைப்பு முழுமைபெற்று செயல்படுதல்.
ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைகள், ஜெயலலிதா மரண விசாரணை.
அரசு நிர்வாகத்தில் சிக்கன நடவடிக்கைகள், பொதுத்துறை நிறுவனங்களை சீரமைத்து இலாபகரமாக மாற்றுதல்.
“இந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், மக்கள் காத்திருக்கின்றனர்” என அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், “பகுதி 2” பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.