தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக தவறான பிம்பம் உருவாக்கப்படுவதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தனியார்மயமாக்கலை எதிர்த்து, பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, வழக்கறிஞர் வினோத் நேற்று முறையீடு செய்தார். அதற்கு தலைமை நீதிபதி அமர்வு, மனுத்தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் வினோத் முறையீடு செய்தார். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகவே உள்ளது. அவர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதைப் போல தவறான தோற்றம் உருவாக்கப்படுகிறது” என நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
















