பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்துகொண்டார். ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்ட கோட்டையில் நடந்த இந்த திருமணம், ‘லவ் ஷாதி டிராமா’ எனும் ஆவணப்படமாக ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது. பாசமான காதல் முன்மொழிவு முதல், கோலாகலமான திருமண நிகழ்வுகள் வரை, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், சமீப காலமாக இந்த ஜோடிக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. ஹன்சிகா தற்போது தாயுடன் தனியாக வசித்து வருவதாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை சோஹைல் மறுத்திருந்தாலும், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவருடனான புகைப்படங்கள் மற்றும் திருமண ஃபோட்டோக்கள் அனைத்தையும் அகற்றியிருப்பது புதிய சந்தேகங்களுக்கு இடமளித்துள்ளது.
இதனையடுத்து, இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும், அவர்களுடைய உறவில் விரிசல் மேலும் தீவிரமாகியிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இதுகுறித்து ஹன்சிகாவும் சோஹைலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.