465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் சிறுவந்தாடு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டியை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் வளவனூர் சிறுவந்தாடு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் கலந்து கொண்டு 465 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டியை வழங்கினார் .மேலும் பள்ளி வளாகத்தில் கூடுதலாக புதிய வகுப்பறை கட்டிடம் வேலை நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர் வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் வளவனூர் பேரூராட்சி நகர செயலாளர் ஜீவா கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வாசு கோலியனூர் ஒன்றிய பெருந்தலைவர் சச்சிதானந்தம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Exit mobile version