2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்தியாவிற்கு 549 ரன்கள் இலக்கு

கவுகாத்தியில் நடைபெற்றுவரும், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனையடுத்து, 288 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக, ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுக்களையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனையடுத்து, 549 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுக்களை இழந்துள்ள இந்திய அணி, 27 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும், 522 ரன்கள் தேவைப்படவுள்ள நிலையில், நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

Exit mobile version