ஜம்மு காஷ்மீரில் 2 கிமீ நீள தேசிய கொடி பேரணி ; 5,000 பேர் பங்கேற்பு

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 2 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய கொடியுடன் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது.

நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ‘திரங்கா யாத்திரை’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், உதம்பூரில் நடைபெற்ற இப்பேரணியில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 5,000 பேர் உற்சாகமாக பங்கேற்றனர். வருங்கால சந்ததியினருக்கு தேசபக்தி உணர்வை ஊட்டும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ரஜோரி துணை ஆணையர் அபிஷேக் ஷர்மா தெரிவித்தார்.

Exit mobile version