மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டாலே, எல்லா வளங்களும் கிட்டும் என்று நம்பப்படுகிறது. லட்சுமியின் அருள் பெற சில பண்புகளை வாழ்க்கையில் கடைபிடிப்பது அவசியம்.
நிபுணர்கள் கூறுவதாவது, லட்சுமியின் அருள் பெற பின்வரும் 12 வழிகளை கடைபிடிக்க வேண்டும் :
- தன்னம்பிக்கையும், தெய்வநம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும்.
- சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
- காலத்தை கண் இமைப்போல் மதிக்க வேண்டும்.
- வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.
- செயல்களை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.
- தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.
- செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.
- திட்டமிட்ட செலவினத்தையும் சிக்கனத்தையும் கடைபிடிக்க வேண்டும்.
- தொழிலில் உயர்வு-தாழ்வுகளைப் பொருட்படுத்தக் கூடாது.
- லாபத்தில் மகிழ்ச்சியோ, நஷ்டத்தில் வருத்தமோ அடையக் கூடாது.
- சுயநலத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
- எந்த சூழலிலும் கடன் வாங்கக் கூடாது.
மேற்கண்ட பண்புகளை கடைபிடிப்பவர்களே, மகாலட்சுமியின் அருளைப் பெற்று வளமுடன் வாழ முடியும்.