தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக அரசின் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் ஒன்றாக, 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநில தலைமைச் செயலாளர் இரா. முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.

இந்த இடமாற்றத்திற்கான விவரங்கள் வருமாறு:

நிதித்துறை செலவின செயலராக பிரசாந்த் மு வடநெரே நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை இணைச் செயலராக ராஜகோபால் சுன்கரா பணியமர்த்தப்படுகிறார்.

நில அளவைத்துறை இயக்குனராக தீபக் ஜேக்கப் நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக கஜலட்சுமி பொறுப்பேற்கிறார்.

கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனராக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார்.

குடிநீர் மற்றும் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மீன்வளத்துறை இயக்குனராக முரளீதரன் நியமிக்கப்படுகிறார்.

வருவாய் நிர்வாக ஆணையராக கிரண் குராலா பொறுப்பேற்கிறார்.

கோவை வணிகவரி இணை ஆணையராக தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வணிகவரி (அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையராக நாராயண சர்மா நியமிக்கப்படுகிறார்.

மேலும், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலராக உள்ள சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு, இயற்கை வளங்கள் துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version