விழுப்புரத்தில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி மற்றும் குளோபல் கிறிஸ்டியன் சர்ச் ஆப் இந்தியா சினாட் சார்பாக தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு திருத்த SIR பணி நிறுத்த வேண்டும், கிறிஸ்துவ மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வளர்ச்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி திடலில் தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்த பணி இ எஸ் ஐ ஆர் உடனடியாக நிறுத்த வேண்டும் ,கிறிஸ்துவ மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி மற்றும் குளோபல் கிறிஸ்டியன் சர்ச் ஆப் இந்தியா சினாட் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் தேசிய தலைவர் டாக்டர் வி எஸ் ஐசக் அய்யா தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
