மோட்டரே இல்லாத பம்புக்கு பில்லு க்ளியர் பண்ண ஊராட்சி மன்ற தலைவரின் தில்லாலங்கடி செயல்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக தேன்மொழி ரமேஷ் உள்ளார்.

இந்த நிலையில் இந்த ஊராட்சியில் பெருமாள் வட்டம் மற்றும் மச்சக்கண்ண் வட்டம் அளித்த பகுதிகளில் 15 வது மாநில குழுவில் இருந்து மின்மோட்டார் அமைக்கப்பட்டதாக கூறி சுமார் ஒரு லட்சத்து 74 ஆயிரம் என இரண்டு இடங்களில் பில் கிளியர் செய்துள்ளார்.

இதனை அறிந்த அந்த ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பால்னாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாக குற்றம் சாட்டினர்

அதுமட்டுமில்லாமல் மோட்டாரே இல்லாமல் மின்மோட்டார் இயக்கப்படுவதாக கூறி பில் எடுத்ததாக வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டி ஆழ்துளை கிணற்றிலிருந்து ஒரு பைப்பை மட்டும் எடுத்து காண்பித்து செய்தியாளர்களிடம் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.

மேலும் ஒரே ஒரு பைப்புக்காக லட்சங்களை ஊராட்சி மன்ற தலைவர் ஆட்டைய போட்டு எனவும் அதேபோல இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஊராட்சி மன்ற தலைவர் ஈடுபட்டதாகவும் அதற்கு உடந்தையாக கிளார்க் சரவணன் செயல்படுகிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்..

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்..

Exit mobile version