தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை மாதவரம் பகுதி அமைந்துள்ள லாரி பார்க்கிங் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பிலும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதார ரீதியான பாதிப்புகளை அரசு சந்திக்க கூடும் என்று தெரியவந்துள்ளது.இதனையடுத்து சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கூறுகையில் ,
இந்த போராட்டம் ஆனது 9 அம்ச கோரிக்கைகளை கொண்டு நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு லாரி எப்சி பதிவிற்கு கட்ட படுகிற தொகையான 850 தற்சமயம் 28,500 ஆக உயர்த்தி உள்ளதாகவும், இதே லாரி உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும் அதனால் பழைய பதிவு தொகையான 250 ரூபாய் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் அதேபோல் தமிழகத்தின் எல்லை பகுதிகளில் லாரிகள் வருகின்ற பொழுது ஆவணங்களை சரி பார்க்காமல் வழக்கு போடப்பட்டு பணம் பெறுவதாகவும், இதனை தவிர்த்து ஆவணங்களை சரிபார்த்து குற்றம் இருப்பவர்களுக்கு வழக்கு போட்டு அபதாரம் விதிக்க வேண்டுமென்றும் வலியுத்தபட்டது.
அதேபோல் காவல்துறையினர் சார்பில் ஆன்லைன் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் இதில் தவறே செய்யாத வாகனங்களுக்கும் ஆன்லைன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அவதார விதிபதால் லாரி உரிமையாளர்கள் மிகுந்த நஷ்டம் அடை வதாகவும் இதனை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைத்தார்.
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் மத்திய அரசு லாரி டெர்மினல்கழில் வாகன ஓட்டிகளுக்கான ஓய்வு அறை கட்டி அதில் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்ட திட்டம் வரவேற்கக் கூடியது என்றும் அதை உடனடியாக மத்திய அரசு செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்தார்.
இதேபோல் மத்திய அரசு மாநில அரசு ஒன்றிணைந்து லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டம் தொடர்ந்தால் பெரும்இழப்புகள் ஏற்பட கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
