- இன்றைய போர்களை வெற்றி கொள்ள நாளைய தொழில்நுட்பம் தேவை என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
- சிவகாசியில் மது போதையில் வந்ததை தட்டிக்கேட்ட ஆசிரியர் மண்டையை மாணவர்கள் உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தி உள்ளார்.
- திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்யும், சேவை அரசியலோ, செயல் அரசியலோ செய்யாது” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- கிணற்றுக்குள் இருக்கும் தவளை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கடுமையாக சாடியுள்ளார்.
- நடிகர் ரவி மோகன் படத்தில் நடிப்பதாக கூறி பெற்ற ரூ.6 கோடி பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என அவர் மீது தயாரிப்பு நிறுவனம் வழக்கு தாக்கல் செய்த நிலையில் பதிலுக்கு தனக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என ரவி மோகன் அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
- சிறுபான்மையினர் ஓட்டுக்களை பிரிக்க நடிகர் விஜயை அரசியலில் இறக்கியதே பா.ஜ.,தான் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- தி.மு.க., கூட்டணியில், 25 தொகுதிகள் பெற, விடுதலை சிறுத்தைகள் கட்சி இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், சிதம்பரத்தில் நேற்று நடந்த விழாவில், முதல்வர் முன்னிலையில் பேசிய திருமாவளவன், ”தி.மு.க., வாங்குகிற, 4 ஓட்டுகளில் ஒன்று வி.சி., ஓட்டாக இருக்கும்,” என, தன் இலக்கை இலைமறை காயாக சுட்டிக்காட்டினார்.
- தொழில்நுட்பக்கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரிட்டீஷ் போர் விமானம் ஜூலை 23ல் திரும்பிச் செல்லும் என பிரிட்டீஷ் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- இஸ்ரேலின் குற்றங்கள் அனைத்திற்கும் அமெரிக்கா துணை போகிறது என ஈரான் தலைவர் கமேனி குற்றம் சாட்டினார்.