மயிலாடுதுறையில் சுதந்திரபோராட்ட தியாகி சாமிநாகப்பனுக்கு திருவுருவச்சிலை அமைக்கப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தியாகி சாமிநாகப்பபடையாச்சி என்ற முழுபெயரையே பதிவிட வலியுறுத்தி பாமக (டாக்டர் ராமதாஸ்அணி, டாக்டர் அன்புமணி அணி) இரு அணியினரும் தனிதனியாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் ; பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையுடன் கலந்து ஆலோசித்து அறவழிப் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.
மயிலாடுதுறையில் சுதந்திரபோராட்ட தியாகி சாமிநாகப்பனுக்கு திருவுருவச்சிலை அமைக்கப்பதற்காக மயிலாடுதுறை நகராட்சி நகர்புற நலவாழ்வு மைய வளாகத்தில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் 1366 சதுரடி பரப்பளவில் 7 அடி உயரத்திற்கு சாமிநாகப்பன் வெண்கச்சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு விழா நேற்று (05.01.2026) நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தியாகி சாமிநாகப்பன் என்று பெயர் பதிவிடப்பட்டிருந்தது. தியாகி சாமிநாகப்படையாச்சி என்ற முழுபெயரை பதிவிடாமல் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமக இரு அணியினரும் ( டாக்டர் ராமதாஸ் அணி, டாக்டர் அன்புமணி அணி ) தனித்தனியாக வந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்தை சந்தித்து மனு அளித்தனர்.
அதில் சுதந்திரபோராட்ட தியாகி சாமிநாகப்பபடையாச்சி என்ற முழுபெயரை சிலை மற்றும் கலெ்வெட்டி முழுமையாக பொறிக்க வேண்டும். பாமகவின் பல ஆண்டுகளாக போராட்டம் மற்றும் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறையில் திருவுருவச்சிலை அமைக்க அடிக்கல்நாட்டப்பட்டுள்ளது. சுதந்திரபோராட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் பங்கேற்ற போதும் சாமிநாகப்பபடையாச்சி என்று முழுபெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் நோக்கத்திற்காக மயிலாடுதுறையில் அது மறைக்கப்பட்டுள்ளது எனவே அவரது திருவுருவச்சிலை மற்றும் கல்வெட்டுக்களில் சாமிநாகப்பபடையாச்சி என்று முழுபெயரை பதிவிட வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் அணி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையிலும், டாக்டர் அன்புமணி அணி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் ஆகிய இரு அணியினரும் தனித்தனியாக வந்து கட்சியினருடன் வந்து மனு அளித்து சென்றனர். முழு பெயரை வைக்கவில்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் (டாக்டர் ராமதாஸ் அணி) தலைமையுடன் கலந்து ஆலோசித்து அறவழிப் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.