கடலங்குடி அக்னிவீரன் மற்றும் சப்த கன்னிகள் கோவிலின் 7 ஆம் ஆண்டு சித்திரை பால்குட திருவிழா

மயிலாடுதுறை அருகே கடலங்குடி அக்னிவீரன் மற்றும் சப்த கன்னிகள் கோவிலின் 7 ஆம் ஆண்டு சித்திரை பால்குட திருவிழா; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு காவடி, கூண்டு காவடி, 16 அடி நீள அலகு குத்தியும் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கடலங்குடி ஊராட்சி மேலதெருவில் உள்ள அக்னிவீரன் மற்றும் சப்த கன்னிகள் கோவில் உள்ளது. இக்கோவிலின் 7 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏழாம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட உற்சவம் நடைபெற்றது. காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் பூஜைகளுடன் புறப்பாடு ஆகியது. அதனைத்தொடர்ந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு காவடி, கூண்டு காவடி, 16 அடி நீள அலகு குத்தியும் பக்தர்களும் ஊர்வலமாக பச்சை காளி, பவளக்காளி, கருப்பண்ணசாமி ஆட்டத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். வழி நெடுகிலும் பொதுமக்கள் சக்திகரகத்திற்கு தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. சக்தி கரகம் மற்றும் பக்தர்கள் அருள் வந்து ஆடியது அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்தியது.

Exit mobile version