September 24, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காவல்துறை அலட்சியத்தால் மரணம்: இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!

by sowmiarajan
December 9, 2025
in News
A A
0
காவல்துறை அலட்சியத்தால் மரணம்: இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையம் காவல்துறையின் காவலில் இருந்தபோது இறந்த சதீஷ்குமார் என்பவரின் குடும்பத்திற்கு, தமிழக அரசு ஒரு மாத காலத்திற்குள் ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC) உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று ஆணையத்தின் விசாரணையில் உறுதியானதையடுத்து இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், கொடுவாய் நாகலிங்கபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மகன் சதீஷ்குமார் உயிரிழந்தது குறித்துப் புகார் அளித்திருந்தார். அவர் தனது மனுவில் தெரிவித்ததாவது: கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி, கிருஷ்ணமூர்த்தி என்பவர் அளித்த புகாரின் பேரில், என் மகன் சதீஷ்குமாரை அவினாசிபாளையம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காவல்துறை காவலில் இருந்தபோது, புகார் அளித்தவரான கிருஷ்ணமூர்த்தி தாக்கியதில், என் மகன் சதீஷ்குமார் உயிரிழந்தார். காவல்துறையினர் வசம் இருந்தபோதும், அவர்கள் எனது மகனுக்கு உரிய பாதுகாப்பை வழங்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். காவல்துறையின் இந்த அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணமாகும். எனவே, அலட்சியத்துடன் செயல்பட்ட சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், பிறப்பித்த உத்தரவில்: காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கும்போது சதீஷ்குமார் கொல்லப்பட்டது, ஆணையத்தின் விசாரணையில் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கவல்துறையின் அலட்சியப் போக்குதான் இந்த உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது ஏற்கனவே ஊதியக் குறைப்பு உட்படத் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீது மேலும் துறை ரீதியான நடவடிக்கைகள் தேவையில்லை.

இருப்பினும், காவல்துறையின் கட்டுப்பாட்டிலும், பாதுகாப்பிலும் இருந்தபோது, அவர்களுடைய அலட்சியம் காரணமாக ஓர் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால், அதற்கு ஈடாக அரசு இழப்பீடு வழங்க வேண்டியது அவசியம். இதன்படி, உயிரிழந்த சதீஷ்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு மாத காலத்திற்குள் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது உத்தரவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்படும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையின் கடமையையும், அதனை மீறும் பட்சத்தில் அரசு இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பையும் இந்த உத்தரவு வலியுறுத்துகிறது.

Tags: compensation ordercustodial issueshuman rights commissionjusticepolice negligence
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோட்டீஸ் விநியோகம் இந்து அமைப்புகள் முற்றுகை!

Next Post

அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பூசலில் பா.ஜ. தலையிடலாம் தினகரன் ஆதரவு!

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
Next Post
அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பூசலில் பா.ஜ. தலையிடலாம் தினகரன் ஆதரவு!

அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பூசலில் பா.ஜ. தலையிடலாம் தினகரன் ஆதரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 6, 2025
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

May 31, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

குத்தாலம் அருகே ராஜகோபால புரத்தில் உள்ள ஸ்ரீ ஐயன் பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

May 14, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.