சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மனுக்கு தெருவில் சுற்றித் திரியும் 40க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மற்றும் பசு மாடுகளால் பொதுமக்கள் அவதி
புழல் லட்சுமி அம்மன் தெருப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து அப்பகுதியில் சிலர் பால் உற்பத்தி செய்து வருகின்றனர் இந்தப் புழல் பகுதியில் மையப் பகுதியாக அமைந்துள்ளது இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன இந்த தெருவின் வழியாகபுனித அந்தோணியார் தனியா மேல்நிலைப்பள்ளி மற்றும் அப்பகுதியில் இருந்து செல்கின்ற மக்கள் புழல் கேம்ப் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான பிரதான சாலையாகவும் அமைந்துள்ளது
இந்த சாலையின் மாடுகளை வைத்து பால் உற்பத்தி செய்து அதனை வீடுகளுக்கும் மற்றும் ஆவின் பால் நிறுவனத்திற்கும் விநியோகம் செய்கின்ற மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை இரவு நேரங்களிலும் சரி பகல் நேரங்களிலும் சரி சாலைய விட்டு விடுகின்றனர் இதனால் அப்பகுதி வழியாக செல்லுகின்ற வாகனங்கள் மற்றும் நடந்து செல்கின்ற பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர் மாடுகள் சாலையிலேயே நின்று விடுவதாலும் நடந்து செல்பவர்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு அவை சாலையை அபகரித்துக் கொண்டு சாலை மறியல் செய்கின்றன
சில நேரங்களில் அவ்வழியாக நடந்து செல்கின்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என பலரை இந்த மாடுகள் தாக்கம் முற்படுகின்றனர்
ஏற்கனவே இந்த பகுதியில் மாடுகள் பலரை தாக்கி காயம் அடைந்த சம்பவங்களும் நடந்துள்ளது
மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளை பிடிக்க வந்தால் அவர்களை இவர்கள் திருத்த வகையில் சண்டையிட்டு அங்கிருந்து அனுப்பி விடுகின்றனர் இதனால் மாநகராட்சி ஊழியர்களும் மாடுகளை பிடிக்க வருவதில்லை
சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் ஏதேனும் முட்டி உயிர் செலுத்த ஏற்படுத்துவதற்கு முன்பாக இதுக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


















