மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள், இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், நீதிமன்றத்தில் வழக்காடும் பணிகள் பாதிப்பு :-
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமிபிரியா என்பவர், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர் உத்தரவிட்டு அபராதமும் விதித்திருந்தார், இதற்கு கட்டணம் தெரிவித்தும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் நேற்றும் இன்றும் இரண்டு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இன்று இரண்டாவது நாளாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட 8 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன இதேபோல் சீர்காழி நீதிமன்றம் தரங்கம்பாடி நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் இதன் காரணமாக வழக்காடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன தீர்மானம் இயற்றப்பட்டது.
பைட் :-
பாலசுப்பிரமணியன் – மாயூரம் பார் அசோசியேஷன் செயலாளர்














