பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள 16 யூடியூப் சேனல்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 63 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
தடை செய்யப்பட்ட சேனல்களை அணுக முயற்சிக்கும் இந்திய பயனர்களுக்கு இப்போது யூடியூப் பக்கத்தில் ஒரு மெசேஜ் கொடுக்கப்படுகிறது.
‘தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசின் உத்தரவு காரணமாக இந்த யூடியூப் பக்கத்தின் கன்டென்ட் இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.