வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே, சாலையின் நடுவே 2 மண்டை ஓடுகள் கிடந்ததால், சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
பேரணாம்பட்டு அடுத்துள்ள காமராஜ் நகரில், சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சிறுவர் பூங்கா ஒன்றும் உள்ளது. பூங்காவிற்கு செல்லும் சாலையில், 2 மண்டை ஓடுகளை, மர்ம நபர்கள் போட்டுச் சென்றிருக்கின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். திடீரென சாலையின் நடுவே மண்டை ஓடுகள் கிடந்ததால், யாராவது மாந்திரீகம் செய்ய வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
