கேரள மாநிலம் மூணார் அருகே, அந்தரத்தில் உணவு உண்ணும் உணவகத்தில், 150 அடி உயரத்தில் சிக்கிய 5 சுற்றுலா பயணிகள், பல மணிநேர போராட்டத்திற்கு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கேரள மாநிலத்தில் மூணாறுக்கு செல்லும் வழியில், ஆனச்சால் என்ற இடத்தில், உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தரைத்தளத்தில் இருந்து 150 அடி உயரத்தில் அமர்ந்து, உணவு சாப்பிடும் வகையில், பிரத்யேக வசதி உண்டு. இயற்கையை ரசித்தபடி, அந்தரந்தில் உள்ள கேபினில் அமர்ந்து சாப்பிடலாம்.
நேற்று ஒரு குடும்பத்தினர் உணவுசாப்பிடும்போது, கிரேன் திடீரென பழுதடைந்தது. இதையடுத்து அந்தரத்தில் சிக்கியவர்ளை, ரோப் மூலம் உணவக ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.















