ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் மு தலீடு செய்ய முன்வந்திருப்பதே, திராவிட மாடலின் செயல்பாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
15 ஆயிரம் கோடி ரூபாய் மு தலீடு மூலமாக, ஃபாக்ஸ்கான் நிறுவனம் 14 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதற்கும், தமிழ்நாட்டை தேர்வு செய்தமைக்கும், தங்களுடன் இணைந்து எதிர்காலத்தை வடிவமைக்க முடிவு செய்தமைக்கும் நன்றி என, முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை தெற்காசியாவின் உற்பத்தி மற்றும் புதுமைக்கான மையமாக உயர்த்துவதற்கான நமது பயணத்தில் இதுவொரு மைல்கல் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.















