சீர்காழி சுற்று வட்டார பகுதியில் வடிகால் வசதி இல்லாததால்,10,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கவலை

சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், தற்பொழுது மிதமான மழையாக பொழிந்து வருகிறது. சீர்காழி சுற்று வட்டார பகுதியான திருவெண்காடு, மங்கைமடம்,நெப்பத்தூர்,நெய்தவாசல், வழுதலைக்குடி, ராதா நல்லூர் ,வேட்டங்குடி ,இருவக் கொள்ளை ,ஆலங்காடு , எடமணல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முழுவதும் தாழ்வான பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது .
தொடர் மழையால் சுமார் 10000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதன் காரணமாக தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைமடை பகுதி விவசாயிகள் ஏக்கருக்கு 35ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தற்பொழுது பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தண்ணீரை வடிய வைத்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் மேலும் இழப்பீடு வழங்க வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Exit mobile version