திருத்தணியில் பருவ மழை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சியில் அசத்தல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நல்லாங்குளத்தில் வட்டாட்சியர் மலர்விழி மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வடக்கிழக்கு பருவ மழை தொடங்கி மூன்று மாதம் பெய்ய கூடும் இந்த ஆண்டு வடக்கிழக்கு பருவ மழையில் வெள்ளம் ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை தீயணைப்பு வீரர்கள் குடம் கயிறு மூங்கில் கொம்பு வாட்டர் கேன் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் மூலம் வெள்ளம் நீரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து தத்துரூபமாக செய்து காட்டி வீரர்கள் அசைத்தினர்.

ஒத்திகை பயிற்சியில் பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர் அவர்களுக்கு தீயணைப்பு துறையினர் பேரிட படகு லாரி ட்யூப் மூங்கில் கொம்பு உள்ளிட்ட கருவிகளை கண்காட்சியாக அமைத்து அது குறித்து விளக்கினர்

Exit mobile version