ஆசியக்கோப்பை இந்தியா–பாகிஸ்தான் மோதல் : அப்ரிடியின் அதிரடி – 127 ரன்களில் ஆட்டமிழந்த பாகிஸ்தான்

2025 ஆசியக்கோப்பையில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.

ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியதால், பாகிஸ்தான் 2 ஓவர்களிலேயே இரண்டு முக்கிய வீரர்களை இழந்தது. பின்னர் வந்த வீரர்களையும் குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சு கட்டுப்படுத்தியது. அவர் மூன்று விக்கெட்டுகளை பிடித்து இந்தியாவுக்கு வலுவான நிலையை ஏற்படுத்தினார்.

இந்த கடின சூழ்நிலையில், ஷாஹிப் சதாவ் 44 பந்தில் 40 ரன்கள் எடுத்து சில நேரம் நிலை காத்தார். ஆனால் அவரும் அவுட்டானதும், பாகிஸ்தான் 100 ரன்களை கூட எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது.

அத்தகைய சமயத்தில் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, எதிர்பாராத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெறும் சில பந்துகளில் நான்கு சிக்சர்கள் அடித்து அணியின் மொத்த ரன்களை 127 வரை உயர்த்தினார்.

இதனால் இந்தியா முன்னிலையில் 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, இந்திய அணி 7 ஓவர்களில் 64 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடிக் கொண்டிருக்கிறது.

Exit mobile version