மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கும் திட்டம், டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு நாடு முழுவதும் கிடைக்கும் வரவேற்பை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒவ்வொரு வாக்குறுதிகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், சட்டப்பேரவை தேர்தலின் போது, தெலுங்கு தேசம் கட்சி அளித்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்கக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்படுத்த உள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் பெண்கள் ஆகஸ்ட் 15 முதல் அரசு நடத்தும் APSRTC பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க முடியும் என அறிவித்துள்ளார்