பார்லிமென்ட் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் எம்.பி.,க்களின் செயல்பாடுகளை கண்டறிந்து, அவர்களை கவுரவிக்கும் வகையில், ‘ப்ரைம் பாயின்ட் பவுன்டேஷன்’ என்ற தனியார் நிறுவனம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது.
இதில், பார்லிமென்டுடின் ஜனநாயகத்திற்கு தொடர்ந்து சிறந்த பங்களிப்பை அளித்து வரும் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த பரத்ருகரி மகதப், சரத் பவார் தேசியவாத காங்கிரசின் எம்.பி., சுப்ரியா சுலே, சமூக புரட்சி கட்சியின் என்.கே.பிரேமசந்திரன், சிவசேனாவின் ஸ்ரீரங் அப்ப பார்னே ஆகிய நான்கு எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் பா.ஜ.,வின் ஸ்மிதா வாக், வித்யூத் பாரன் மஹத்தோ, பி.பி.சவுத்ரி, பிரவீன் பட்டேல், மேத்தா குல்கர்னி, நிஷிகாந்த் துபே, ரவி கிஷன், மதன் ரத்தோர், திலீப் சாய்கியா, காங்கிரசின் வர்ஷா கெய்க்வாட்.
சிவசேனாவின் கண்பத் மஹாஸ்க், உத்தவ் சிவசேனா பிரிவின் அரவிந்த் சாவந்த், தி.மு.க.,வின் அண்ணாதுரை உள்ளிட்டோரும் சிறந்த எம்.பி.,க்களுக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.